சேலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண் கொல்லப்பட்ட வழக்கில், ஒரு உதவி ஆய்வாளர், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்தம்பட்டியில் அழகு நிலையம் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற அந்தப் பெண் தான் வசித்த குடியிருப்பில் கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி சூட்கேசில் மடித்து வைக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது.
விசாரணையில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிலர் தேஜ்மண்டலின் அழகு நிலையத்துக்கு அடிக்கடி சென்று வந்ததும் அவரது செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
தேஜ்மண்டலின் அழகு நிலையத்தில் பாலியல் தொழிலும் நடந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன் மற்றும் சேகர், தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோரை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.