மழையால் எந்தவித பேருந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை மந்தைவெளி, பட்டினம்பாக்கம் தி. நகர் உள்ளிட்ட பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.