மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், எந்நேரமும் அணை திறக்கப்படலாம் என்பதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை, மூலவைகை, வெள்ளிமலை உள்ளிட்ட வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,753 கன அடியாக உள்ளது.
கடந்த 6 தேதி அன்று அணையின் நீர்மட்டம் 66 அடி எட்டிய உடன் முதல் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டு கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்மட்டம் தற்போது 68.51 ஆக உள்ள நிலையில் இரண்டாம் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.