சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் செலவில், கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது குறித்த பொதுப்பணித்துறையின் விரிவான திட்ட அறிக்கைக்கு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து திட்ட மதீப்பிடு தயார் செய்யப்பட்டு, அரசாணை வெளியாகியுள்ள நிலையில் நினைவிடத்திற்கான ஒப்பந்த புள்ளி கோரப்படவுள்ளது.