மழை, வெள்ள காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பூஜ்யம் புள்ளி 27 சதவீதம் இணைப்புகளுக்கு மட்டுமே மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை நீர் வடிந்த பிறகு மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்படும் என கூறினார்.
ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், நிலைமையை சமாளிக்க மின் பணியாளர்களும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், புகார்களை தெரிவிக்க செல்பேசி எண்ணையும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.