ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2வது பெரிய அணையான பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6757 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 6500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1500 கன அடி தண்ணீரும் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.