செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்

Nov 08, 2021 06:17:47 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரண்டாம் நாளாக இரவு நேரத்தில் மழை விட்டு விட்டு பெய்த நிலையில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வதற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டாம் நாளாக விட்டு விட்டு மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழை காரணமாக தியாகராய நகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வியாசர்பாடி, போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நேற்றிரவு சற்று மழை ஓய்ந்தாலும் மேற்கண்ட பகுதிகளில் மழை நீர் வடியாத நிலை காணப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், தென்கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement