ஒசூர் அடுத்த தாசனபுரத்தில் வீட்டின் முன் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நாள் காலை வீட்டை விட்டு சென்ற இளைஞர் சுரேஷ் மறுநாள் காலையில் வீட்டின் முன் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் உயிரற்று கிடந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.