சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் காலை 6 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
போக்குவரத்து குறைவான காலை நேரமென்பதால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவலறிந்த மாநகராட்சியினர் மற்றும் காவல்துறையினர், பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையிலுள்ள போக்குவரத்தை நிறுத்தி திருவேங்கடம் தெரு வழியாக தேவநாதன் சாலையில் இணைத்து போக்குவரத்தை மாற்றியமைத்தனர்.
சாலையில் திடீரென தோன்றும் பள்ளங்களுக்கு பூமிக்கடியில் உடையும் கழிவுநீர் குழாய் ஏற்படுத்தும் மண்அரிப்பே காரணம் என மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர்.