கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கீழணையிலிருந்து நொடிக்கு இரண்டாயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. இந்த அணையின் வடகால் மூலம் கடலூர் மாவட்டப் பகுதிகளும், தென்கால் மூலம் மயிலாடுதுறை மாவட்டப் பகுதிகளும் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நொடிக்கு இரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.