கடந்த மாதம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறினார்.