மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று மல்லிகைப்பூவானது கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாளைய தினம் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக வரும் 5 டன் மல்லிகை வரத்து தொடர்மழையின் காரணமாக 1 டன்னாக குறைந்ததன் காரணமாகவும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை நேற்றைய தினம் 1400ஐ தொட்டு, இன்று கிலோ இரண்டாயிரமாக மாறியுள்ளது.
எதிர்வரும் சஷ்டி மற்றும் தீபாவளியால் அதிகரித்த மலர்களின் தேவை, தட்டுப்பாடான நேரத்தில் மற்ற மலர்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.