கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீ விபத்துக்குள்ளாகி 8 பேரின் உயிரை பலி வாங்கிய பட்டாசுக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வகணபதி என்ற அந்த நபர் நடத்தி வந்த பட்டாசுக் கடையில், கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பட்டாசுக் கடையின் உரிமையாளர் செல்வகணபதியை 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக வெடிமருந்து பட்டாசுகளை வைத்திருந்தது உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.