ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட SKM குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரில், எஸ்.கே.எம். தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக சோதனை நடத்தினர்.
வருமானத்தை குறைத்துக் காட்டி சொத்து சேர்த்ததும், போலி விற்பனை ஆவணங்களை சமர்ப்பித்து வரி எய்ப்பு செய்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பழைய மற்றும் உபரிப்பொருட்கள் விற்பனையையும் மறைத்து காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத 300கோடி ரூபாய் வருமானத்தை வைத்து அசையா சொத்துகளில் முதலீடு செய்வதை கண்டுபிடித்துள்ள அதிகாரிகள், 3 கோடியே 30 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.