தஞ்சையை சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியரின் மகன் அரவிந்த் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் 43 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ரமணி நகரை சேர்ந்த எல்ஐசி ஊழியரான ராமச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்த் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் 43 வது இடம் பிடித்தார்.
11-ஆம் வகுப்பு முதலே பள்ளியில் பயிலும்போது நீட் தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் கையேடுகளை வாங்கி அதனை தொடர்ந்து படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.