தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் குவிந்த மக்கள் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
சேலம் மாநகரில் நிரந்தர கடைகள், தற்காலிக கடைகள் என மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று பண்டிகைப் பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இதேபோல் கோவை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் குவிந்த மக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.