விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நேற்று மாலை திண்டிவனம் ரயில் நிலைய மூன்றாவது நடைமேடையில் நின்றிருந்த சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக் தயாள் சோனி என்பவரின் உடமையை சோதனை செய்தபோது அவரது பையில் ஒரு கிலோ எடையுள்ள 51 தங்க நெக்லஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விழுப்புரம் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.