சிறந்த தேசத்தை உருவாக்க அனைவரும் வரி செலுத்தி சிறந்த குடிமகனாக இருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி புறநகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்று பேசினார். அப்போது அனைவருக்கும் தாய்மொழி கடவுளை போன்றது என்றார்.
இந்தியர்கள் சுதந்திரத்தை கொண்டாட முடியாது என்று வின்ஸ்டன் சர்ச்சில் பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்தியா, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தற்போது இருக்கிறது என்று தெரிவித்தார்.