கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை 5 சவரனுக்கு உட்பட்டு பொது நகைக் கடன் பெற்றவர்களின் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் நகைக் கடன்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்ப அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக பெற்ற கடன் மொத்தமாக 5 சவரனுக்கு கீழ் இருந்தாலும் தள்ளுபடியாகும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேல் கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி இல்லை என கூறப்பட்டுள்ளது.