கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பேருந்து நிலையத்தில் வைத்தே, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, 500 ரூபாய் வரை இடைத்தரகர்கள் வசூலிப்பதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை, ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனவும் தெரிவித்தனர்.
புகாரை மனுவாக தாக்கல் செய்யும்படி, மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டு, வி.ஐ.பி. தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்தும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.