காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூரில் கன மழையும், கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் டெல்டா உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.