கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட மர்மநபர்கள், உணவக மேலாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சூளகிரியில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுபோதையில் வந்த 4 பேர், உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களிடம் மேலாளர் ஹரிஷ் பணம் கேட்டபோது நான்கு பேரும் ஹரிஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியும், அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தும் சேதப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து காயமடைந்த ஹரிஷ் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், கணேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.