தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், ஆட்டோக்களில் அதிகப்படியான நபர்கள் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ததோடு, வீலிங் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. நாலாபுறமும் தொங்கிக் கொண்டு சென்றவர்களால் ஆட்டோவே ஆட்டங்கண்டு போனது.
கானாவிலக்கு பகுதியிலுள்ள, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த குழுக்களாக வந்த இளைஞர்கள் சிலர் பைக்குகளிலும் வீலிங் செய்தனர். அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகளை வழிமறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் முன், கேலிக்குரிய வகையில் இளைஞர் நடனமாடி ஆட்டம் போட்டு ரகளை செய்த வீடியோவும் வெளியாகியுள்ளது.