வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வாகன தணிக்கையின் போது லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் திருவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் குமரேசன், ஆந்திராவுக்கு கதிர் அறுக்கும் இயந்திர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, கிருஸ்டியான் பேட்டை பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், அவரை மிரட்டி 300 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனை செல்போனில் வீடியோ பதிவு செய்த விஜய் குமரேசன், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் உத்தரவின் பேரில் பிரகாஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.