வாடிக்கையாளர் சேவை மைய முகவர்கள் போல் பேசி, டெபிட், கிரிடிட் கார்டு விபரங்களை வாங்கி பண மோசடி செய்த ஜம்தாரா மோசடி கும்பலை கொல்கத்தாவில் பிடிக்க, அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி உதவியதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹவுரா நகரின் காவல் ஆணையராக உள்ள சுதாகர் என்ற அந்த அதிகாரி, இருப்பிடம், சைரன் வைத்த வாகன வசதி, மொழிபெயர்ப்பாளர், உணவு, போன்றவற்றை செய்து கொடுத்து உதவியாக போலீசார் கூறியுள்ளனர்.
சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற தனிப்படையினரை, அங்குள்ள அதிகாரிகள் வெவ்வேறு எண்களை கொடுத்து அலைக்கழித்ததாகவும், பின்னர் கடைசியாக ஹவுரா நகரின் காவல் ஆணையராக தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் பணிபுரிவது தெரிந்து அவரை தொடர்பு கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.