கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கு புழுக்கள் இருந்த முட்டைகளை வழங்கிய சத்துணவு அமைப்பாளரை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கவுண்டம்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் இருந்ததாக அண்மையில் புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை அலுவலர் ஆகியோரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.