இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், பாம்பன் தூக்கு பாலத்தை அதிநவீன நான்கு ரோந்து கப்பல்கள் கடந்து சென்றதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இரு நாட்களுக்கு முன் கொச்சின் படகு கட்டும் தளத்திலிருந்து, மேற்குவங்கத்தின் கடல் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக கட்டப்பட்ட மூன்று அதிநவீன ரோந்து கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றும் பாம்பன் துறைமுகத்திற்கு வந்தன.
இன்று மதியம் பாம்பன் தூக்கு பாலம் திறக்கபட்டு மேற்கு வங்கம் நோக்கி கடல் எல்லை பாதுகாப்பு பணிக்காக ரோந்து கப்பல்கள் பாலத்தை கடந்து சென்றது. இதனை பாலத்தில் நின்றிருந்த சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும், செல்போனில் வீடியோ எடுத்தும் சென்றனர்.