சென்னை பெரம்பூரில் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் தீ பற்றிய நிலையில், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த போக்குவரத்து தலைமைக் காவலரின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.
அகரம் சந்திப்பு அருகே அமைந்துள்ள கோவிலுக்கு வெளியே இருந்த சாமி சிலைக்கு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விளக்கேற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, விளக்கில் இருந்து மூதாட்டியின் புடவைக்கு எதிர்பாராதவிதமாக தீ பற்றியது.
இதனை கவனித்த மூதாட்டி பதற்றமான நிலையில், அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஓடிச் சென்று மூதாட்டியை கீழே உருட்டி, புடவையிலிருந்து உடலுக்கு தீ பரவாத படி தீயை அணைத்தார்.மூதாட்டி காயமின்றி உயிர் தப்பிய நிலையில், காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.