அரசுப் பள்ளியில் பயின்று ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்ற மாணவரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன் - பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார். அரசுப் பள்ளியில் பயின்ற அருண்குமார், இந்த ஆண்டு ஹைதராபாத்திலுள்ள ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், அருண்குமாரை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.