தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.
கம்பம் மெயின் ரோட்டில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், சாலையோரக் கடைகளில் காலாவதியான மற்றும் ரசாயனம் கலந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், காலாவதி தேதி அச்சிடப்படாமல் இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்ததோடு, மீண்டும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றனர்.