திருப்பூர், கூத்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
ஈரோடு, நம்பியூரை சேர்ந்தவர் குமார், இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் துணிகளை தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு திரும்பிய போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.