ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஹெலிகாப்டர் சகோதர்களுக்குக் உதவியதாக கைது செய்யப்பட்ட சோலை செல்வம் என்பவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையில், முக்கிய குற்றவாளியின் மனைவி மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், ஒரு வழக்கில் மட்டும் அவர் ஜாமீன் பெற்றுள்ளதை குறிப்பிட்டு ஏன் வேறு வழக்குகளில் அவரை கைது செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும், இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.