புதுக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக சாந்தநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்த மழை நீர் 2 நாளாகியும் வடியாததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கீழ ராஜவீதி அருகேயுள்ள பல்லவன் குளமும் நிரம்பி, சாந்தநாத சுவாமி கோவிலுக்குள் நீர் புகுந்து 2வது நாளாக தேங்கி நிற்கிறது.
இதனிடையே, கோவிலுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.