சென்னையில் விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரமுகரை வெட்டி கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107 வது வட்ட செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு மலையாள கிளப் ரோடு சந்திப்பு- மேயர் சிட்டிபாபு தெருவில் இளங்கோவன் மற்றும் அவரது நண்பர் ஜெயவேல் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.
அப் போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனரர். இதில் படுகாயமடைந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.