அறிவியல் முனைப்பு கொண்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, "அறிவியல் தொடர்பான குறியீடுகள், வார்த்தைகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பது கடினமாக இருப்பதாக" மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அது மாணவர்களின் குறைபாடு அல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஜெர்மனியிலும் ஜப்பானிலும் ஆங்கிலத்தை பின்பற்றாததால், அவர்கள் அறிவியல் வளர்ச்சியில் குறைந்தவர்கள் என கூறவியலாது என்று கூறினர். அனைத்து வட்டார மொழிகளிலும் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். (( GFX OUT ))