தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி, கேரளாவை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடக பகுதியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பான அளவிலே பெய்யும் என பாலசந்திரன் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.