சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் கட்டுமான துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விலைவாசி உயர்வின் காரணமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டால் அடித்தட்டு மக்கள் வரை மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார்.
எனவே தமிழக அரசு கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.