கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே போதை ஆசாமி ஓட்டி வந்த பைக் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியின் மீது மோதி, பல அடி தூரத்துக்கு அவர் இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நெய்யூரைச் சேர்ந்த அனுசுயா என்ற அந்த மாணவி, சக மாணவிகளுடன் பேசிக் கொண்டே சாலையின் வலதுபுறமாக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்புறம் அதிவேகமாக வந்த பைக் ஒன்று மாணவி மீது மோதி, பல அடி தூரத்துக்கு அவரை இழுத்துச் சென்று தூக்கி வீசியது. இதில் அனுசுயா தலையிலும் கால் பகுதியிலும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவி மீது மோதிய பைக் ஆசாமியின் பெயர் பாஸ்கர் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றுகிறார் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவத்தின்போது அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர்.