தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்த மக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள எம்.சி. சாலையில் புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் குவிந்த நிலையில், போலீசார் 4 உயர் கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோயம்புத்தூர் பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, தஞ்சாவூர் அண்ணா சாலை மற்றும் காந்திஜி சாலை, மதுரை விளக்கு தூண், திருச்சி சின்னக்கடை வீதி மற்றும் பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மிஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சென்றனர்.