9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த 9 மாவட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவியிடங்களை பெருமளவு திமுக கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில், நெல்லை, தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை தொடர்ந்து, அதிமுக, அமமுகவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.