கடலூரில், முந்திரி ஆலைத்தொழிலாளர் கோவிந்தராஜ் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 ஊழியர்களை முந்திரி ஆலைக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜன் என்பவரின் மரணம் தொடர்பாக எம்.பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 5 ஊழியர்களையும் ஒரு நாள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அவர்களை சிபிசிஐடி போலீசார் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டிருந்த முந்திரி ஆலைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.