ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை அவ்வழியே வந்த காட்டு யானை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40க்கும் மேற்பட்ட பயணிகளோடு, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த பேருந்தினை, ஆசனூர் அருகே வழிமறித்த காட்டு யானையை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கமாக கருதப்படுகிறது.