ஏழை-எளியோரின் மூவேளை பசியாற்றும் அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி நெருக்கடி காரணமாக அம்மா உணவகங்களுக்கு கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வழங்கப்படும் சப்பாத்தி நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக இட்லி மற்றும் தக்காளி சாதம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அம்மா உணவக திட்டம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிகவனம் செலுத்திட வேண்டும் என்றும், ஓ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.