டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னையில் 16 பணிமனைகளில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு துறைக்கான வருவாய் பெருக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.