சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் தொடர்பாக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்க வில்லை என தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019 ல் இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு இது எதிரானது என்பதுடன், தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.