தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்த தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அரசின் செய்திக்குறிப்பில், போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020-21 ஆம் ஆண்டுக்கான போனஸ், 8 புள்ளி 33 விழுக்காடாகவும், கருணைத்தொகை ஒன்று புள்ளி 67 விழுக்காடாகவும் முடிவு செய்யப்பட்டு மொத்தம் 10 விழுக்காடு போனசாக வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதி உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், அதிகபட்சமாக, போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 8 ஆயிரத்து 400 ரூபாய் பெறுவார்கள்.