விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகைக்கடை பஜாரில் இளம்பெண் மீது ஆசிட் ஊற்ற முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவிந்தன் நகரை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால் கணவரிடம் விவாகரத்து பெற்ற பின் திருமணம் செய்துக்கொள்வதாக அப்பெண் கூறி வந்த நிலையில், தினந்தோறும் மது போதையில் பிரபு அப்பெண்ணிற்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்ததால் அவரை திருமணம் செய்ய அப்பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பிரபு அப்பெண் மீது ஆசிட் வீச முயன்றுள்ளான். நல்வாய்ப்பாக அப்பெண் தப்பிய நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரபுவை கைது செய்தனர்.