ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் டீசல் தீர்ந்து நகர முடியாமல் நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நேற்று மாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி சென்ற சரக்கு லாரி 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென டீசல் தீர்ந்ததால் நகர முடியாமல் நின்றது.
இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.