பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியதை ஏற்ற உயர்நீதிமன்றம், பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆரணியில் 7 ஸ்டார் பிரியாணி கடையில், பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி லோசினி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கைதான கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
40 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதையும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதையும் கருத்தில்கொண்டு, 2 வாரங்களுக்கு தினசரி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.