காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலுக்கான பணியின்போது கூச்சலிட்டுக் கொண்டிருந்த கட்சியினரை கட்டுப்படுத்த முயன்ற தேர்தல் அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
6 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட தாங்கி ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்காக திமுக அதிமுக என இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜன்னல் வழியாக கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர் என்று கூறப்படுகிறது.
அவர்களை சமாதானப்படுத்த முயன்ற தேர்தல் அலுவலர் ஹரிகிருஷ்ணனிடம் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு ஹரிகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்தார்.